கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksas) மற்றும் அவரின் அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் கொழும்பு – காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில் இரும்பு வேலிகளை அமைத்து பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில் மாணவர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம வீட்டை முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டுள்ள மாணவர்கள் அங்கிருக்கும் தடையை உடைத்து முன்னேற முயற்சி செய்து வருவதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகி வருகின்றன.