மலையக மக்களின் அரசியல், தொழில் உரிமைகளுக்காக உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும், “மலையக தியாகிகள் தினம்” இன்று 2024.01.10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டக்கலை கொமர்சல் லேக்கில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் நடைபெறும்.
1930 இற்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்குபற்றி உயிர்நீத்த அனைத்து தோட்டத்தொழிலாளர்களையும் மலையக தியாகிகள் என அடையாளம் காண்கின்றோம்.