சொட்டுக்கருவி ஊடாக ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக நேற்று (13) நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளர் என தெரிவிக்கப்படுகிறது.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த சொட்டுக்கருவியில் இருந்து கிருமித் தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பொருத்தப்பட்டிருந்த சொட்டுக்கருவியில் இருந்து இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.
பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கு அவர் உயிரிழந்துள்ள நிலையில் சொட்டுக்கருவியில் இருந்து ஏற்பட்ட கிருமித் தொற்று மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.