40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.
பரிசோதனை முடிந்தவுடன் இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை, 40,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிய மேலும் ஒரு கப்பல் இன்று இலங்கையை வந்தடைய உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.