இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடை பவணி மற்றும் மௌன ஆர்ப்பாட்டம் கொழும்பில் நடைபெற்று வருகின்றது.
இந்த நடை பவணியில், இறந்தது போல் உடை அணிந்து பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த நடை பவணி கொழும்பில் உள்ள பல இடங்கள் உட்பட அளுத்கடைக்கு நடந்து சென்று ஈஸ்டர் ஞாயிறு ஆன இன்று (17-04-2022) காலிமுகத்திடலை சென்றடையும் என தெரியவருகின்றது.