மாமியாரை மருமகன் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (25) கெப்பித்திக்கொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
53 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் மூத்த மகளுக்கும் அவரது கணவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக மகள் கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மருமகன் நேற்று (25) வீட்டுக்கு வந்து மாமியாரின் தலையில் மண்வெட்டியால் தாக்கியபோது இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்த நபர் காலி பிரதேசத்தில் உள்ள கடற்படை முகாமில் பணிபுரியும் கடற்படை வீரர் என என தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .