சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து சம்பவம் தொடர்பில் மருத்துவர் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.