நபர் ஒருவரின் சடலம் வீட்டின் பின் புறத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மூன்றரை வயது குழந்தையை கட்டிலில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமே இவ்வாறு காணப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தக் குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகத்தன்ன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எஸ்.சம்மிக்காவின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் பரிசோதகர் குமாரரத்ன, பிரதி பொலிஸ் பரிசோதகர் ஜெயசிங்க ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்