இலங்கையில் வருடாந்த பணவீக்கம் மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் மரணச் சுழலில் இலங்கையின் பொருளாதாரம் உள்ளதாக அமெரிக்க பொருளதார வல்லுநர் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி இலங்கையின் பணவீக்கம் இதுவரையில் 120% ஆக உயர்ந்துள்ளதாக முன்னணி பொருளாதார நிபுணர் Steve Hanke தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி கோரியுள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரம் தற்போது மரணச் சுழலில் இருப்பதாகவும் Steve Hanke குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முன்னணி பொருளாதார நிபுணர் Steve Hanke அமெரிக்காவில் உள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.