அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, வருகைதரவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பண்டாரவளையில் வீதியை மறித்து கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால், பதுளை- பண்டாரவளை வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் , பண்டாரவளைக்கு இன்று விஜயம் செய்திருக்க திட்டமிட்டிருக்கவில்லை என நாமல் டுவிட் செய்துள்ளார்.
அத்துடன் இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மன்னிப்பு கோரியுள்ளார்.
வெலிமடையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்றிருந்த சிலர், தான் வருவதாக பரவிய செய்தியால், கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியதாக இணையத்தில் பகிரப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் “வெலிமடையில் திட்டமிடப்பட்ட நிகழ்வு எதுவும் எனக்கு இல்லை, இது வதந்தியாகும். இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிக்கவும்” என பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்