நேற்று மாலை தனியார் பேருந்தொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மாடுகள் மீது மோதியதில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதிக்கு உட்பட்ட நாயாத்து வழி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இதன்போது மேலும் பல மாடுகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.