தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், (Dhanush) அவரது மனைவி ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்வதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் ஹிந்தி மட்டும் இல்லாமல் ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்து உள்ளார். தற்போது தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
இந் நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமான ஜஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு திடீர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
நடிகர் தனுஷ் நேற்று இரவு (17-01-2022) திடீர் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பயணிக்க முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து செய்வதாக அறிவித்தது, ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்துக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதேபோன்ற அறிக்கையை ஐஸ்வர்யாவும் வெளியிட்டுள்ளார்.