பசறை நகரில் அமைந்துள்ள மதுபானசாலையில் ஒன்றில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8.5 லீற்றர் பெற்றோல் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
பசறை மதுபானசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டு வெளி நபர் ஒருவரினால் பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாக பசறை பொலிஸாருக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
இதனை அடுத்து விரைந்து தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் 8.5 லீற்றர் பெற்றோலை மீட்கப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 33 வயதுடைய பசறை நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதான சந்தேக நபருக்கு எதிராக எதிர்வரும் 14 ஆம் திகதி பசறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.