மட்டக்களப்பு – கல்லடி இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக வான் ஒன்று கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (21-03-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
எனினும் விபத்தில் எவருக்கும் எவ்வித உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விபரம் இதுவரை வெளிவர நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.