மட்டக்களப்பில் நிகழ்வொன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த இல்ல முகாமையாளர் திடிரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தில் நேற்று (25) மாலை நடைபெற்ற நிகழ்வில் மாவடிவேம்பைச் சேர்ந்த 63 வயதுடைய சிவசம்பு பாக்கியராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புலம்பெயர் நாடொன்றில் வசிக்கும் நன்கொடையாளரால் இல்லதிற்கு வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி மூடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரிசி மூடைகள் கையளிக்கும் நிகழ்வில் உதவி புரிந்த நபருக்கு நன்றி கூறி உரையாற்றும்போது திடிரென மயக்கமுற்றவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமடைந்தார்.
சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்திவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம் முகாமையாளர் யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக சேவையாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.