மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ் சோலை பகுதியில் வைத்து நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியாகியுள்ளார்.
கனகன் முருகேசன் எனும் 60 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவரே இவ்வாறு காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யானை தாக்கி உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு உள்ளதுடன் குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.