மட்டக்களப்பில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றைய தினம் (22-05-2022) சாரதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு ஊழியர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.
இதன்போது இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தினமும் நீண்ட வரிசைகளில் நின்று மக்கள் எரிபொருட்களை பெற்றுச்செல்வதை காணமுடிகின்றது.
இந்நிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இடையில் எரிபொருட்களை வழங்குவதனாலும் குறிப்பட்டளவிலேயே எரிபொருள் வழங்கப்படும் நிலையில் சிலருக்கு அதிகளவில் வழங்கப்படுவதாலும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக தினமும் எரிபொருட்கள் நிலையத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதன் காரணமாக பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.