மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளை செங்கல்லால் தாக்கியதாக கூறப்படும் வாகரை பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், செங்கலை எடுத்து வீசியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு அவரை பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.