மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் விசேட அதிரப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில் (29-04-2024) அன்று மாலை சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சட்டவிரோத வியாபார நடவடிக்கை ஒன்றிற்காக வருகை தந்துள்ளதாக புலனாய்வு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த தகவலயடுத்து மாறுவேடத்தில் அங்கு சென்ற விசேட அதிரடிப்படை குழு கண்காணிப்பில் ஈடுபட்டு, சந்தேக நபரை சுமார் 2.5 கோடி பெறுமதியுடைய யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை 11 கஜமுத்துக்களுடன் கைது செய்தனர்.
கைதான சந்தேக நபர் 30 வயது மதிக்கத்தக்க மயிலவெட்டுவான் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் சட்ட நடவடிக்கைக்காக அதிரடிப்படையினரால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.