மட்டக்களப்பின் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறிபாலு விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் புலையவெளி வாகன விபத்திலேயே அவர் பலியாகியுள்ளார் .
செங்கலடி கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த தம்பிநாயகம் சிறிபாலு (54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் முதல் கொண்டு பல சிவில் சமூக செயற்பாடுகளி ஈடுபட்டவர் என்பதோடு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றி வருகிறார்.
கரடியனாறு பகுதியில் இருந்து செங்கலடி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதி ஓரத்தில் டயர் பஞ்சராகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றின் மீது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியயுள்ளது.
இதன் போது சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.