நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் குறைந்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுவாச நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்படைய நோய் நிலைமைகள் உள்ள மக்கள் முகக்கவசங்கள் அணிவது பாதுகாப்பானது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் காற்று மாசடைவதற்கு வங்காள விரிகுடா போன்ற பிற நாடுகளின் வெளிப்பகுதிகளில் இருந்து வரும் மாசடைந்த காற்றே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.
காற்றுடன் வரும் பல்வேறு வகையான காற்று மாசுபாடுகளால் நாட்டின் காற்றின் தரம் குறைந்துள்ளது.
இந்நிலை பொதுவாக மிகவும் சிறியது மற்றும் குறைந்தபட்சம் அந்த பகுதிகளில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய முக்கிய மாவட்டங்களிலும் மன்னார் பகுதியிலும் காற்றின் தரக் குறியீடு குறைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கோட்டுக்கொள்ளப்படுகின்றனர்.