பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராடடம் நடத்தும் நபர்களுக்கு எதிராக வன்முறையை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுவினர் காலிமுகத் திடலுக்கு சென்று தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், வன்முறைகள் ஏற்பட்டதால், அதற்கு ராஜபக்ச அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், அலரி மாளிகைக்கு எதிரில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தன்னை தாக்கியதாக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கூறியுள்ளார்.
மகிந்தவுக்கு எதிராக கோஷம் போட்டாய எனக் கேட்டு, தன்னை புகைப்படம் எடுத்து, நீ சண்டியனா எனக் கூறி, , மோட்டார் சைக்கிள் காவியை எடுத்துக்கொண்டு, தன்னை கீழே தள்ளி நான்கு பேர் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் தன்னை தாக்கியவர்கள் தனக்கு நான்கு அடையாளம் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மூக்கில் இருந்து இரத்தம் வடிவதை காணக் கூடியதாக உள்ளது.