அரசாங்கத்தின் துணையுடன் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கும் குண்டர்களின் செயற்பாடு மிகுந்த கண்டனத்திற்குரியது என கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், போராட்டக்காலத்தில் ஏற்பட்ட சட்டத்தின் ஆட்சி எங்கே? பொலிஸ் என்ன செய்கிறது? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று காலை அரசாங்க ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.
இந்தநிலையில், போராட்டக்காரர்களின் பகுதிக்குச் சென்ற மகிந்த ஆதரவாளர்கள் அங்கிருந்தவர்களை தாக்கியதில் பலர் காயமடைந்தனர்.
அத்துடன் கலவரம் ஏற்பட்ட காலி முகத்திடலுக்கு சென்ற எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அங்கிருந்த எதிர்ப்பாளர்களால் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர்.