நாட்டில் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பம் முதல் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் பின்னர் அநேகமான நகரங்களில் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொசோன் காலத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் மூலம் கடந்த இரண்டு தினங்களில் நீரில் மூழ்கிய 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.