இலங்கையில் சுமார் 120,000 பேர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துவதாக அதிர்ச்சித் தகவலை தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் , கிட்டத்தட்ட 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் அதன் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்தார்.
சிகரெட், மது
பொதுவாக, சிகரெட், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதே வேளை , ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.
மேலும் ஹெராயின் மற்றும் மரிஜுவானா பாவனையாளர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை பெறாமலேயே போதைப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாக நாணயக்கார கூறினார்