எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை நேற்றைய தினம் (04-06-2022) அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொதுப் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையில் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்