மட்டக்களப்பில்(Batticaloa) கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளினால் மோதி தப்பியோடிய சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – காத்தான்குடியில் பிரபல பாடசாலை ஒன்றின் முன் காலை மஞ்சள் கடவையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோட்டார் சைக்கிளினால் மோதிவிட்டு தப்பிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
சம்பவத்தில், காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஏ. தர்ஷினி உத்தரவு பிறப்பித்தள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் செலுத்திய மோட்டார் சைக்கிளை காத்தான்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.