மாவத்தகம பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த உந்துருளியில் மோதுண்ட உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவத்தகமவில் மெட்பொக்க காவல்நிலையத்தில் சேவையாற்றும் உத்தியோகத்தரே விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அப் பகுதியில் இன்று காலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அவர் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த உந்துருளியை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தரின் கட்டளையை மீறி பயணிக்க முற்பட்ட உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உருந்துருளியில் பிரவேசித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.