பொருட்கள் மீதான உத்தேச வரிகளில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் உள்ளடக்கப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய வரி விதிப்புக்களில் சூதாட்டம், மதுபானம் போன்றனவே அடங்கும் என தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்றும் சீனி வரி திருத்தப்படாது என்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
1947ஆம் ஆண்டிலிருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது ஒரு பிரச்சினை என சுட்டிக்காட்டிய அவர், எந்த அரசாங்கமும் குறைக்க முன்வரவில்லை என்றும் கூறினார்.
பொருட்கள் மீதான உத்தேச வரிகளில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் உள்ளடக்கப்படாது
No Comments1 Min Read

