பேருந்து மோதி வயோதிப பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பிலியந்தலை மிரிஸ்வத்த சந்தி பகுதியில் சொகுசு பஸ்ஸில் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம்
பிலியந்தலையில் இருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த சர்வதேச பாடசாலைக்கு சொந்தமான சொகுசு பஸ் வீட்டுக்கு முன்னாபாக பூ பறிப்பதற்காக சென்ற பெண் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் சாரதி கவனக்குறைவாக பஸ்ஸை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

