மின் கட்டணம் அதிகரிப்பு காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரிகளின் மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளது என அச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக்கொள்ளவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.