அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி 22 வயது இளம்பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் இரகசியமாக நுழைந்து பாலியல் லஞ்சம் கேட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பிரதேசத்தை சேர்ந்த பெணொருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதுடன், ஹிக்கடுவ, கோனாபினுவல பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் அந்தரங்கப்படங்களை போலியாக தயார் செய்து அவரை மிரட்டிய நிலையில் ஹிக்கடுவ, கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணிடம் இளைஞர் பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .
இளம் பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்த இளைஞர் , குறித்த பெண்ணிடம் காதலிக்குமாறு கேட்டுள்ளார். எனினும் அவரது கோரிக்கைக்கு இணங்க பெண் மறுத்துள்ளார்.
இதனையடுத்து இளம்பெண்ணுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அந்தரங்க புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுதாக மிரட்டியுள்ளார்.
அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எந்தவிதமான கணினி அறிவும் இல்லை, ஆனால் மற்றவர்களின் சமூக ஊடக வலையமைப்புகளை அணுகும் அசாத்திய திறமை கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர் சுமார் 50 போலி முகநூல் கணக்குகளை வைத்திருப்பதாகவும் அதன் மூலம் பல இளம் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேலும் கைதான இளைஞருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்..

