குருநாகலில் உள்ள அம்பன்பொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரியின் கணவரின் முறைப்பாடுக்கு அமைய துரித தீர்வு ஒன்றை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கியுள்ளார்.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கணவர் தொலைபேசி குறுந்தகவல் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு தன் மனைவி எதிர்நோக்கும் சிரமங்களை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில், பொலிஸ் மா அதிபர் குறித்த பெண் பொலிஸ் அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் வசிக்கும் மஹவ பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளார்.
இந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது 3 பிள்ளைகள் மற்றும் கணவருடன் மஹவ பொலிஸ் பிரிவில் வசிப்பதாகவும், தினமும் அம்பன்பொல பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அம்பன்பொல பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள், குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் முறைப்பாடு தொடர்பில் உரிய தீர்வுகளை வழங்கவில்லை என பொலிஸ் மா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.