கொரோனா பரவலை தடுப்பதற்காக மூன்றாவது டோஸ் பைசர் அல்லது பூஸ்டர் தடுப்பூசியை பெற்ற பிறகு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளை பற்றிக் கவலைப்பட தேவையில்லை என சிறப்பு வைத்தியர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்தார்.
தடுப்பூசி உடலில் செயல்படுத்தப்படுவதால் சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்தும் போது, கொவிட் போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும்.
உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும். ஆனால் பயப்பட வேண்டாம். தடுப்பூசியால் ஏற்படக்கூடிய சில அறிகுறிகள் இவை என அவர் தெரிவித்துள்ளார்.