பூநகரி – பரந்தன் வீதியூடாக தனிமையில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் குடமுருட்டி பாலத்தை அண்மித்த பகுதி உள்ளிட்ட சில குடியிருப்பு அற்ற பகுதிகளில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வீதி ஓரத்தில் மோட்டார் சைக்கிள் அல்லது சைக்கிள்களில் நிற்கும் நபர்கள் வீதியால் தனியே பயணிப்பவர்கள், பெண்களை அச்சுறுத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நாடெங்கும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் அந்த வீதி ஊடாக பயணிப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதனால் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நேற்றய தினம் அரச ஊழியர் ஒருவர் வழிமறிக்கப்பட்டபோதும் அவர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார். மேலும் குறித்த வீதியில் வாழ்வாதாரத்துக்காக பாலைப்பழம், ஈச்சம்பழம், கயூ பழம், நாவல் பழம் என விற்பனை செய்பவர்களுக்கக்கும் வழிப்பறி கொள்ளையர்களால் பாதிப்பு ஏற்படலமாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.