முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு கொண்டு சென்றவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் மடக்கி பிடித்த சம்பவம் நேற்று (27) பதிவாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மீன் வியாபாரம் செய்வது போல் மீன் பெட்டியில் கசிப்பினை பொலித்தீன் பைகளில் கட்டி வைத்து அதற்கு மேல் மீனை வைத்து இரகசிய மான முறையில் கசிப்பை எடுத்துச் சென்ற நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் அறிக வருகையில், புதுக்குடியிருப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில் கசிப்பு கொண்டு வரப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் விசேட குழு ஒன்றை அனுப்பி வள்ளிபுனம் பகுதியில் வைத்து குறித்த கசிப்பினை எடுத்து வந்தவரை கைது செய்துள்ளார்.
மீன் வியாபாரம் செய்வது போல் மீன் பெட்டியில் கசிப்பினை பொலித்தீன் பைகளில் கட்டி வைத்து அதற்கு மேல் மீனை வைத்து இரகசிய மான முறையில் எடுத்து வரப்பட்ட 55 போத்தல் கசிப்புடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளிலும் பொலிஸாரால் பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.