எதிர்வரும் வருடத்தில் அரசாங்கம் புதிய பயணத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரம்பரிய கட்டமைப்பிற்கு மட்டுப்படாமல் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் புத்தாண்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
அநுராதபுரம், இபலோகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.