அண்ணாத்த படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரது அடுத்தப் படத்தை இயக்கும் இயக்குநர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஹிந்திப் பட இயக்குநர் பால்கி, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். அந்தக் கதை அவருக்கு பிடித்துவிட்டதாகவும், விரைவில் இந்தப் படம் குறித்து ரஜினிகாந்த் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணி உறுதியானால் படத்துக்கு பெரும்பாலும் இளையராஜா தான் இசையமைக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் பால்கி இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.