இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய அலைபேசி செயலி (அப்) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதனை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக அச்செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.