ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 22 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணி, எதிர்வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வர உள்ளது.
20-20 போட்டித் தொடரில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு விளையாட்டு அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டி20 அணிக்கு வனிந்து ஹசரங்க அணித் தலைவராகவும், சரித் அசலங்க உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை 20-20 அணிக்கு ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
பானுக ராஜபக்ச, பினுர பெர்னாண்டோ மற்றும் அகில தனஞ்சய ஆகியோரும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான 20-20 தொடருக்கான இலங்கை அணி வீரர்கள் விபரம்
வனிந்து ஹசரங்க, (தலைவர்) சரித் அசலங்க, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்திஸ், (உப தலைவர்) சதீர சமரவிக்ரம, தசுன் சானக, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, மக்ஷீஷ் தீக்ஷன, நுவன் துஷார, குசல் ஜனித் பெரேரா, பானுக ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், மதீஷ பத்திரன, துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, ஜெஃப்ரி வெண்டர்சே, சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான், தில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.