ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். அப்படிப்பட்ட புதன் தற்போது தனது சொந்த ராசியான மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 11 ஆம் திகதி புதன் புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
இந்த நட்சத்திரத்தில் புதன் ஜூலை 08 ஆம் திகதி வரை இருப்பார். இந்த புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். புதன் குரு பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வது மிகவும் மங்களகரமானது.
முக்கியமாக புதனின் அருளால் ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மிதுனம்
புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மன அமைதி அதிகரிக்கும். இதனால் எந்த ஒரு விஷயத்திலும் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். தொழிலில் உங்களின் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
மேலும் பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கலாம். உடன் வேலை செய்வோருடனான ஒருங்கிணைப்பு மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அரசு வேலைகளில் இதுவரை தடையை சந்தித்து வந்தால், புதனின் அருளால் வெற்றிகரமாக நிறைவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், இனிமையும் அதிகரிக்கும்.
சிம்மம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெற்றிகள் குவியும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். முடிவெடுக்கும் திறன் வலுவடையும். தொழிலதிபர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். ஐடி துறையில் இருப்பவர்களுகு பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
துலாம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பேச்சில் இனிமை அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சமூகத்தில் உங்கள் நிலைமை உயரும். அரசியலில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
தொழிலில் புதிய சாதனைகளைப் படைக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் ஒரு புதிய தொழிலை வெற்றிகரமாக தொடங்குவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

