மத்திய சுற்றாடல் அதிகார சபை பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பல பிளாஸ்டிக் பொருட்களை இன்று (01) முதல் தடை செய்ய நடவடிக்கை எடுத்து இருந்த போதிலும் மேலும் அது தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் வைக்கோல், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் கோப்பைகள், பானம் கிளறி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கோப்பைகள் (தயிர் கப் தவிர), பிளாஸ்டிக் ஸ்பூன்கள் மற்றும் ஃபோர்க்ஸ் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இது கடந்த பெப்ரவரி மாதம் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
அதன்படி இன்று (01) முதல் இந்த தடை அமுல்படுத்தப்படவிருந்தது.
எவ்வாறாயினும் இந்தத் தடை தொடர்பான வர்த்தமானியின் பல தொழில்நுட்ப விடயங்கள் திருத்தப்பட்டு சட்ட வரைவு திணைக்களத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கைகள் அநேகமாக அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும் என்றும் அதிகாரசபை குறிப்பிடுகிறது.
இது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே இந்த தடை தொடர்பான வர்த்தமானியை ஜூன் மாத முற்பகுதியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.