ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள், இரத்த மழை என்னும் இயற்கை நிகழ்வை எதிர்கொள்ள நேரிடலாம் என பிரித்தானியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதனால், வெளிச்சம் போதாமையால் விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் எனவும் பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் வெப்ப அலை காரணமாக கடுமையான வெயில் நீடித்து வருகிறது.
இதனால், சஹாரா பாலைவனத்தில் காணப்படும் தூசுக்கள் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளை மூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஸ்பெயினில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும் எனவும், விமானங்களால் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே ஸ்பெயினுக்கு சென்றுள்ள பிரித்தானியர்கள் குறித்த இயற்கை மாறுபாட்டால் பாதிக்கப்படக்கூடும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.