பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்குத் திரும்பும் பயணிகள், திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.
ஜூலை 19ஆம் திகதி முதல், இங்கிலாந்தில் செம்மஞ்சள் பட்டியல் நாடுகளில் இருந்து வந்த பெரியவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த தேவையில்லை.
ஆனால், தென்னாபிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பீட்டா மாறுபாட்டின் தொடர்ச்சியான தொற்றுகள் காரணமாக, இந்த தளர்த்தல் பிரான்சுக்கு பொருந்தாது என்று அரசாங்கம் கூறியது.
உலகளாவிய திறந்த மூல தரவுத்தளமான GISAIDஇன் படி, கடந்த நான்கு வாரங்களில் பிரான்ஸில் பதிவான சில தொற்றுகளில் 3.4 சதவீதம் பீட்டா மாறுபாடாகும். பீட்டா மாறுபாட்டிற்கு எதிராக தடுப்பூசிகள் இயங்காது என்ற கவலைகள் உள்ளன.
இதனிடையே சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கருத்து தெரிவிக்கையில், ëகொவிட்-19 பரவுவதைத் தடுக்கவும், எங்கள் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் மூலம் கிடைத்த லாபங்களைப் பாதுகாக்கவும் எங்கள் எல்லைகளில் விரைவான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்பதில் நாங்கள் எப்போதும் தெளிவாக இருக்கிறோம்.
நாடு முழுவதும் திங்களன்று கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், சர்வதேச பயணம் முடிந்தவரை பாதுகாப்பாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், மேலும் எங்கள் எல்லைகளை மாறுபாடுகளின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்போம்í என கூறினார்.