இலங்கைியன் பிரபல நடிகை பியுமி ஹன்சமாலியிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
விசாரணைகளுக்காக முன்னிலையாகுமாறு பியுமி ஹன்சமாலிக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பியுமியிடம் விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணைகளுக்கு பியுமி ஒத்துழைப்பு வழங்க மறுத்ததாக பொலிஸார் நீதிமன்றிற்கு அண்மையில் அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பியுமி குறித்த விசாரணைகள் தொடரும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் சொத்து குவித்துள்ளதாகவும் வருமான வழியை காண்பிக்கத் தவறியுள்ளதாகவும் பியுமிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பியுமிக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகின்றது.
பியுமி, அழகுசாதன பொருள் விற்பனை மற்றும் விநியோக நிறுவனமொன்றை நடாத்தி வருகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் பியுமி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.