கடந்த சில நாட்களாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எந்த பரபரப்பும் இல்லை. கொஞ்சம் கலாட்டா, சண்டை, நகைச்சுவை, சலசலப்பு இருந்தால்தான் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லையா என்ற கேள்வி எழுந்தது. நிகழ்ச்சியைப் பற்றி மக்கள் அதிகம் பேசுவதில்லை. இந்த வாரம் யார் நீக்கப்படுவார்கள் என்ற கேள்வி நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு உள்ளது.
இந்த வாரம் 2 பேர் நீக்கப்படுவார்கள் என்ற செய்தியை அடுத்து கிடைத்த தகவலின்படி ஷாரிக், சினேகன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறவுள்ளனர். பதவியை விட்டு விலகி என்ன செய்வார் என்பது இதுவரை தெரியவில்லை.