தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 76 நாட்கள் நிறைவடைந்து விட்டது.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 10 பேர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது பத்து போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இதில் கடந்த வாரம் இலங்கைப் பெண்ணான ஜனனி வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
அதில் கமல் பேசுகையில் விக்ரமன் நம்முடைய பெரிய தகப்பன் ஒருவருக்கு கடிதம் எழுதினார் எனக் கூறுகின்றார்.
அதற்கு உடனே விக்ரமன் எழுந்து “அம்பேத்கர் தனக்காக ஒரு பைசா கூட சேர்த்து வைக்காத ஒரு தந்தை, கேட்க நாதியற்ற சனத்திற்காகப் போராடினார்” எனக் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் கமல் கண் கலங்கி அழுகின்றார்.
பின்பு ஒரு காகிதத்தை தனது பாக்கட்டில் இருந்து எடுத்து “இது ஒரு பழைய கடிதம், 90 களில் எழுதியது, உங்களைப் போலவே எனக்கும் இந்தக் கடிதத்தை எழுதும் போது கண்கள் கலங்கி விட்டன” எனக் கூறுகின்றார்.
அதுமட்டுமல்லாது கண்கள் கலங்கியவாறே அந்தக் கடிதத்தை வாசிக்கின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.