பிக் பாஸ் 6 இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த ப்ரமோவில் தப்பு செய்தவர்களை தட்டி கேட்கணும் என்று கமல் கூறுகிறார்.
பிக் பாஸ் சீசன் 6 பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. போன வார எபிசோடில் கமல்ஹாசன் குறிப்பிட்ட மாதிரியே முதல் வாரத்திலே இந்த சீசன் போட்டியாளர்கள் கன்டெண்ட் கொடுக்க தயாராகி விட்டனர்.
அதேவேளை மற்ற சீசன்களில் 50 நாட்களுக்கு மேல் தான் போட்டியாளர்கள் வாய்கால் தகராறை தொடங்குவார்கள்.
சண்டை, அழுகை
ஆனால் இந்த சீசன் போட்டியாளர்கள் அட்வான்ஸாக சென்று முதல் வாரமே சண்டை, அழுகை என டி.ஆர்பி ரேசில் இணைந்து விட்டனர். குறிப்பாக தனலட்சுமி, அசல், அசீம் ஆகியோர் தினமும் ஒருவருடன் முட்டிக் கொள்கிறார்கள்.
நேற்றைய எபிசோடில் அசீம் வாடி போடி என பேச, ஆயிஷா செருப்பை கழட்ட பிரச்சனை பூதாகரமானது. கடைசியில் இருவரும் ஒருவரையொருவர் மன்னிப்பு கேட்டு தங்களுக்குள்ளே முடித்துக்கொண்டனர்.
எனினும் கமல் இதை சாதாரணமாக விடமாட்டார் என்பது நன்கு அறிந்ததே. அதிலும் அசீமின் பேச்சு, உடல்மொழி, பாவனை ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது.
இதனால் இந்த முறை கமல்ஹாசன் அம்பு அசீம்மை நோக்கி தான் இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடின் புரமோவில் தப்பு செய்தவர்களை தட்டி கேட்க போகிறேன் என வெளிப்படையாக கூறுகிறார் கமல்ஹாசன்.
அதேவேளை அசீம் மட்டுமல்லாது பெண்கள் விஷயத்தில் அசல் நடந்து கொள்வதை கமல் கண்டித்து பேச வேண்டும் என்ற கோரிக்கைகளும் ரசிகர்களிடம் இருந்து எழுந்துள்ளது.