உரிய எடையின்றி பாண்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று முதல் சந்தைகளில் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் , எடைகள் மற்றும் அளவீடுகள் சட்டத்தின்படி சரியான எடை இல்லாமை, அதே போன்று விலையைக் காட்சிப்படுத்தாமல் இருப்பது சட்டத்தை மீறுவதாகக் கருதப்படுகிறது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் பல வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் மற்றும் கடுமையான எச்சரிக்கையை விடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.