புத்தாண்டில் கடமைகளைப் பொறுப்பேற்ற பலரும் கைகளை நீட்டி, பதவிப்பிரமாணம் செய்துகொளவது வழமையாக உள்ளது. இந்த நிலையில், தான் கல்விக்கற்ற பாடசாலைக்கே அதிபராக தெரிவு செய்யப்பட்ட அதிபர், அந்த பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபராக சின்னப்பா நாகேந்திரராசா,அவர்கள் நேற்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தான் கல்விக்கற்ற பாடசாலையைப் பொறுப்பேற்பதற்காக கற்றவர்கள் உற்றவர்கள் புடைசூழ வந்திருந்த அதிபர், பாடசாலையின் கட்டிட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கியபோது சுற்றிநின்றோர் மெய்சிலிர்த்தனர்.
அதேவேளை சின்னப்பா நாகேந்திரராசா,அவர்கள் தண்டுவான் அ.த.க.பாடசாலை, கற்சிலைமடு பண்டாரவன்னியன் ம.வி, முத்துஐயன்கட்டு வலதுகரை ம.வி போன்றவற்றின் அதிபராகவும் கடமையாற்றியிருந்தார் .
மேலும் அவர், சிறந்த கலை இலக்கிய செயற்பாட்டாளர் என்பதுடன் செம்மொழிக்குரலோன், பண்டாரவன்னியன் விருது மற்றும் கம்பீரக்குரலோன் போன்ற இன்னுமின்னும் பற்பல விருதுகளையும் பெற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.